டெல்லியில் வரும் 16ம் தேதி 15 நாட்கள் நடைபெரும் பழங்குடியினருக்கான ஆதி மகோத்சவ் திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில் இந்த 15 நாட்கள் திருவிழா நடக்க உள்ளது.
நாடுமுழுவதும் உள்ள பழங்குடிஇன கலைஞர்கள் தங்களின் பயிர்கள், தானியங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முன்டா தெரிவித்தார்
மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முன்டா நேற்று வெள்ளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில், 15 நாட்கள் நடைபெறும் ஆதி மகோத்சவ் திருவிழாவை வரும் 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். நாடுமுழுவதும் உள்ள பழங்குடியின கலைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்கள், தானியங்கள், சிறுதானிய வகைகளை காட்சிப்படுத்தலாம், விற்பனை செய்யலாம். பழங்குடியின சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதி சிறுதானியங்கள். 2023ம் ஆண்டே சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.
குடியரசுத் தின அணிவகுப்பில் முதல் பரிசு பெற்ற அரங்கும் இதில் காட்சிக்காக வைக்கப்படும். 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி கலைஞர்கள், கைவினைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். 19 மாநிலங்களில் இருந்து வரும் பழங்குடி மக்கள், 20க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளை அமைக்க உள்ளனர்.
இந்த திருவிழாவை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, பழங்குடி கலைஞர்கள், கைவினைஞர்களுடன் கலந்துரையாடுகிறார், அவர்கள் அமைத்துள்ள அரங்குகளுக்குச் சென்று காட்சிப்படுத்திய பொருட்கள், தானியங்கள், சிறுதானியங்களையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
உலகளவில் புவிவெப்பமயமாதல் பெரும் பிரச்சினையாகி வரும் நிலையில், பழங்குடியினர் இயற்கைவேளாண்மை மூலம் உற்பத்தி செய்த பொருட்கள், தானியங்கள், சிறுதானியங்கள் முக்கியத்துவம் பெறும்.
பழங்குடி அமைச்சகத்தின் கீழ் வரும் டிஆர்ஐஎப்இடி அமைப்பு, தேசிய பழங்குடி திருவிழாவை நடத்துகிறது, பழங்குடி கலைஞர்கள், பெண்களின் பொருட்களை விற்கவும் உதவுகிறது.
பழங்குடியினர் உற்பத்தி செய்த தானியங்கள், சிறுதானியங்கள் விற்பனை மற்றும் காட்சி, கலைஞர்கள் உருவாக்கிய பொருட்கள், கைத்தறி, கைவினைஞர்கள் உருவாக்கிய பொருட்கள், ஓவியங்கள், நகைகள், மூங்கில் பொருட்கள், பானைகள், பழங்குடியினஉணவுகள் உள்ளிட்ட பலவகைகள் காட்சிப்படுத்தப்படும், விற்பனைக்கும் வைக்கப்படும்.
20 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டபழங்குடியின கலைஞர்கல் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். பழங்குடியின விழாக்கள், அறுவடை நாட்கள், திருவிழாக்களில் ஆடப்படும் நடனங்கள், பாடல்களை பாடும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடக்கும் இவ்வாறு அர்ஜுன் முன்டா தெரிவித்துள்ளார்.
Leave a Reply