சிவராத்திரி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் மக்கள் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவஜோதி அர்ப்பணம் 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கு கின்னஸ் சாதனை முயற்சியாக 21 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும் என அவர் கூறியுள்ளார்.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை கூட்டி இதற்கான ஏற்பாடுகளின் ஏற்ற அவர் ஆய்வு செய்தார். அப்போது உஜ்ஜைன் நகர கோவில்கள், வர்த்தகப் பகுதிகள், வீடுகள், சிப்பா நதிக்கரை மற்றும் முக்கிய சந்திப்புகளில் இந்த விளக்குகளை ஏற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் உஜ்ஜைனில் வசிப்பவர்கள் மகாசிவராத்திரி என்று 21 லட்சம் விளக்குகளை ஏற்றி இறைவனுக்கு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவார்கள். அரசு மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே இந்த மிகப்பெரிய நிகழ்வு சாத்தியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply