சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க வருமான வரித்துறையானது 24X7 கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ...

புதுமை பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த பட்டாபிராம் இந்து கல்லூரியில் தொடங்கி வைத்தார். 12ஆம் வகுப்பில் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு உயர்கல்வியில் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெரும் வகையில் தமிழக அரசு புதுமை பெண் எனும் திட்டத்தை கொண்டு ...

மக்களவையில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டிய திமுக எம்.பி. கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், திமுக அரசியல்வாதிகள், கட்சிக் கூட்டங்கள் என்று நினைத்து பொய்களைப் பரப்புவதற்கும், உண்மைகளை திரித்துக் கூறுவதற்கும், நாடாளுமன்ற அரங்கைப் பயன்படுத்துவது வழக்கம். திமுக எம்பி கனிமொழியும் நேற்று மக்களவையில் தனது கட்சியின் ...

புதுடெல்லி: ‘மோடி மீதான இந்தியாவின் நம்பிக்கை என்பது எதிர்க்கட்சிகளின் புரிதலுக்கு அப்பாற்பட்டது’ என்று நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரை நிகழ்த்தினார். அப்போது, ”நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி ...

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் தான் முதல்வராகி கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஆக வேண்டும் என்று துடித்தார் சசிகலா. அதற்கு பன்னீர்செல்வம் சம்மதிக்காததால் அவரை போயஸ் கார்டனில் மிரட்டி, அடித்து சம்மதிக்க வைத்து கையெழுத்து வாங்கினார்கள் என்ற பேச்சு இருக்கிறது. அதனால் தான் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார். தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா ...

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்யவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்தத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் ...

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 6ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.. அதானி குழுமம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்தாண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ...

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் ஒன்றிய அரசின் மின்துறை அமைச்சகம் சார்பில் ”இண்டியா எனர்ஜி வீக்-2023” கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் துவக்க விழாவில் ஆளுநர் தாவர்சந்த்கெலாட், முதல்வர் பசவராஜ்பொம்மை, ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொண்டனர். விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எரிசக்தி கண்காட்சியை தொடங்கி வைத்தார். நவீன சோலார் அடுப்பு, ...