அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் வரும் பிப்ரவரி 20ஆம் மாலை 4 மணிக்கு அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்”அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை எக்மோரில் உள்ள அசோகா ஹோட்டலில் பிப்ரவரி 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என ஓ.பன்னீர்செல்வம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடவிருக்கும் ஆலோசனை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply