வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்! தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது. சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை ...

கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்பும் அதிமுக.. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுடன் அதிமுகவினர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராகவும் மற்றும் அதிமுக சட்டவிதிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதிமுகவினர் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பேசி வருகின்றனர். இன்றுடன் ...

குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.தலைவர்களில் ஒருவருமான மாயா கோட்னானி மற்றும் பஜ்ரங் தளத்தின் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 60-க்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆமதாபாத் அருகே நரோடா காம் என்னுமிடத்தில் நடந்த கலவரத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ...

தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் அமமுகவிலிருந்து நீக்கம்.. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த ஒரே ஒரு பேரூராட்சி தலைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன்படி, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகரை அமமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ...

ராம்நகர்-கனகபுரா தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தம்பி சுரேஷும் நேற்று மனு தாக்கல் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.ராம்நகர் மாவட்டம் கனகபுரா சட்டசபை தொகுதியில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக தரப்பில் வருவாய் துறை அமைச்சர் அசோக் களம் இறக்கப்பட்டுள்ளார். இருவரும் பிரமாண்டமான ...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் செல்லும் என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை ...

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் தனது உரையில், முன்னாள் பிரதமர், சமூக நீதி காவலர், இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகன் மறைந்த வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் அறிவிப்பை விதி ...

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தலைமை தேர்தல் ஆணையம்.. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அதன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி ...

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.. மாநில பிரிவினைக்கு பின் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி, விஜயவாடா அருகில் இருக்கும் அமராவதியை ஆந்திர மாநில தலைநகராக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் அங்கு சட்டமன்றம், ...

நிறுவனங்கள் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவு சான்றிதை வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரிகின்ற நிறுவனம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உரிமையாளருக்கு பதிவு சான்றிதழ் ...