நாட்டின் வரி வசூல் ரூ.2 லட்சம் கோடி… நிர்மலா சீதாராமன் பெருமிதம்..!

கலபுரகி-”நாட்டின் பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் உள்ளது. நாட்டின் வரி வசூல், இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது,” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கலபுரகியில் பா.ஜ., தேர்தல் பிரசாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் குற்றம்சாட்டுவது போன்று, நாட்டின் பொருளாதாரம் நிலையற்றதாக இல்லை.
பொருளாதார நிலை சீராகவும், சிறப்பாகவும் உள்ளது. நாட்டின் வரி வசூல், இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இப்பணம் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கல்’டிஜிட்டல் மயமாக்கல்’ மக்களின் கடின உழைப்பால் வரியாக வசூலிக்கப்படும். ஒவ்வொரு பைசாவையும் நரேந்திர மோடி சிந்தித்து, திட்டமிட்டு செலவு செய்கிறார்.ஒவ்வொரு பைசாவும் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில், ‘ஜன்தன்’ கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன.அதுமட்டுமின்றி, பல்வேறு திட்டங்களின் கீழ், ‘டிஜிட்டல் மயமாக்கி’ பணத்தை செலவழிக்காமல், மக்களை சென்றடைய நரேந்திர மோடி அரசு, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இது இந்தியாவின் பரிணாமம் இல்லையா.இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று வெறும் வாய்பேச்சுகளால் சொல்ல முடியாது.யாரும் செய்யாத பணிகளை, கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., அரசு செய்து வருகிறது. ஸ்டார்ட் அப்கள்புதிய ‘ஸ்டார்ட் அப்’களில் இருந்து இளம் தொழில் முனைவோர் முதலாளிகளாக மாறியது மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். இது வேலையில்லாத திண்டாட்ட நிவாரணம் இல்லையா.நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறனை நாங்கள் அடைந்துள்ளோம். இது உலகளவில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இந்தியா வளர்ந்து வருகிறது என்பதற்கு சான்றாகும்.இவ்வாறு அவர் பேசினார்.