நாளை அறிவித்திருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வாபஸ் பெற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ...
சென்னை: 18-வது லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துவார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24, ...
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட திருநாவுக்கரசர் எம்பி முயற்சித்து வரும் வேளையில் திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் லூயிஸும் திருச்சி சீட்டுக்கு முயற்சித்து வருகிறார். இதை அறிந்த திருநாவுக்கரசர் அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஆதரவாளர்கள் பலரையும் மாவட்ட காங்கிரசில் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார். மாவட்ட தலைவர் ...
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த ...
டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில், திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் முள்-ஆணிப் படுக்கைகளை விரித்து ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுமையான சூழலை உருவாக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் ...
சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3ஆவது நாளான இன்று, வினாவிடை நேரம் முடிவுற்ற பிறகு, நேரமில்லா நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தனித் தீர்மானங்களை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு சட்டப்பேரவையில் உள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இரண்டு தீர்மானங்கள் பின்வருமாறு: ...
திராவிடக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் தங்கள் கட்சியின் மாநாடுகளை நடத்துவது பெரும்பாலும் திருச்சியில்தான். இத்தகைய சிறப்புவாய்ந்த திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் இருந்து வருகிறார். வரும் தேர்தலிலும் அவர் திருச்சியில் தி.மு.க கூட்டணி சார்பில் சீட் பெற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்கு முன்னோட்டமாக ஊருக்கு முன்பே தொகுதியை ...
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்: ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை ...
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து மத கோவில் கும்பாபிஷேகம் நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.இதனை தொடர்ந்து அங்குள்ள சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.’அஹலான் மோடி’ அதாவது ‘வணக்கம் மோடி’ ...
புதுடெல்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளைப் பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மத்திய அரசின் பல்வேறு துறைகள், ஆயுதப்படை, பொதுத் துறை நிறுவனங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கும் மெகா திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். அதன்படி, ...













