வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்ககடல் மற்றும் ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி பேசுகையில் மாவட்டத்தில் சிறு மற்றும் குரு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்வதாகவும் இங்கு உள்ள தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்ப்பதற்கும் புதிய தொழில் நிறுவனங்களை ...

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு ரயில்கள் சென்று வருகிறது. கோவைக்கு வராத ரயில்கள் கூட போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும். போத்தனூர் ரயில் நிலையத்தில் 5 பிளாட்பாரம் உள்ளது. கோவை அடுத்தபடியாக இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...

கோவையில் கடந்த சில நாட்களாக கனமழையும், அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. வரும் நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று காலை திடீரென ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் ...

கோவை: 18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. பெரும்பாலான குழழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை. இதை தவிர்க்க கோவை மாவட்ட போலீசார் சார்பில் பிராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ...

பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.     கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...

முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நடத்திய 3 மணி நேர சிறப்பு யாகத்தால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பக்தர்களும் இந்து அமைப்பினர்களும் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டு இருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் நேற்று சிறப்பு யாகம் ...

*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...

கோவை ரெயில் யார்டு அருகே வாலிபர் ஒருவர் ரெயில் மோதி 2 துண்டுகளாக இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த வாலிபரின் உடலை பரிசோதனை ...