தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால்  காலை முதலே கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியது.தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் முன்பு உள்ள குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். விரதம் இருந்து மதியம் உச்சி பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கோவில் முன்பு நெய்தீபம் ஏற்றி பண்ணாரி அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை  வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களின்  வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது..