பிறந்தது தமிழ் புத்தாண்டு… கோவில்களில் சிறப்பு வழிபாடு..!

மிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சித்திரை ஒன்றாம் தேதி, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பிரபல கற்பக விநாயகர் கோயிலில், மூலவர் தங்க கவசத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். நெல்லையில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று, புதுச்சேரியில் பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் விசேஷ திருமஞ்சன சேவை நடைபெற்றது..