ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு.. ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கொரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் ...
சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை ...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் ...
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளங்கலை படிக்க, முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவியபங்களிப்புடன், ...
போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தேசிய மாணவர் படையினர் பேரணி. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிருஷ்ணா, , ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வானவராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான், போன்ற கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200 பேர் போதை பொருட்கள் தடுப்பு, கொரோனா விழ்ப்புணர்விற்காக பதாகைகளை ஏந்தி ...
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 20 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற இருப்பதால் மார்ச் 19 ஆம் தேதி விடுமுறை என்று அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை கட்டாயமான முறையில் பள்ளிகள் செயல்படும் என்றும் ஆனால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்து ...
ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிராக ஒருதரப்பு மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். ...
பெங்களூரு : ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, ...
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கும் சூழல் ஏற்பட்டது. ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு ...
குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆசிரியா்களின் மேற்பாா்வையில் மாணவா்கள் உள்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கை: தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி, திங்கள்கிழமை முதல் மாா்ச் 19-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. மாணவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை ...