பள்ளி முன்பு நிற்கும் வாகனங்கள்: மாணவர்கள் அவதி
கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பள்ளி முடிந்து வரும் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பள்ளியின் எதிரே உள்ள கடைகளுக்கு உதிரி பாகங்கள் இறக்குவதற்காக சரக்கு லாரிகளும் வாகனங்களும் பள்ளியின் முன்பு நிறுத்திக் கொண்டு இறக்கி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் பல மணி நேரம் காத்திருந்து வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மற்றும் மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது ஏற்படும் சிரமத்தை குறைக்க அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Leave a Reply