கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி.!!

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி..

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் புதுமையான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு ஏற்றவகையில், ஜூலை 19 மற்றும் 20, 2022 அன்று உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது.

இந்த மாநாட்டில், மாணவர்களின் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தொழில்கள், தொழில்முனைவோர், தொழில் தொடங்குபவர்கள் ஆகியவற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். இந்த மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சி மூலம் விவசாயத் தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர், இந்த தொழில்நுட்பத்தின் தாக்கங்களைப் புரிந்து கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட முடியும்.

இந்த கண்டுபிடிப்புகள், பயிர் ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பு, பயிர் மேம்பாடு, அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள், மூலிகை ஊட்டச்சத்து மருந்துகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொழில்முனைவோர்கள் அவர்களின் தேவைகளின் அடிப்படையில், கண்டுபிடிப்புகளைத் தேர்ந்தெடுக்கமுடியும் ஆராய்ச்சி வழிமுறைகளில் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களை இணைப்பதன் மூலம் தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கவும், சந்தைப்படுத்தவும் எளிதாக முடிகிறது.

இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இணையவழி மூலமும் நேரிடையாகவும் இணைந்துள்ளனர். இதர பல்கலைக்கழக மாணவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் மாற்று கற்றல் முறைக்கும் இது உதவி புரியும்.

இந்த மாநாடு, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்துவதற்கும் தொழில் முனைவோர் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. வேளாண் கண்டுபிடிப்புகள் 2022 ஜூலை 19 முதல் 22ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, பொது மக்களுக்கு இலவசமாக காட்சிப்படுத்தப்படுகிறது