கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ “ஹார்ட்டி உட்சவ்‌ 2022”..!

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ “ஹார்ட்டி உட்சவ்‌ 2022”..!

 

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர் பெ.ஐரின் வேதமணியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தோட்டக்கலை இளங்கலை மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். இவ்விழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறு தோட்டக்கலை கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இவ்விழாவின் துவக்க விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி தலைமை தாங்கினார். இவ்விழாவில் முதன்மையர் (வேளாண்மை), முதன்மையர் (மாணவர் நலமையம்), சிறப்பு அலுவலர் (தோட்டக்கலை கல்லூரி ஜீனூர்) தேர்வு கட்டுப்பாட்டாளர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரிகளுக்கிடையே வினாடி-வினா, பழங்கள் மற்றும் காய்கறிகளில் கை அலங்காரங்கள், தீயில்லா சமையல், பாட்டு, நடனம், கவிதை, வள்ளுவம், படம் பார்த்து கவிதை, எண்ணங்களை வண்ணமாக்குதல், நான் யார், தூரிகையில்லா ஓவியம், மலர் அலங்காரம் மற்றும் கைப்பேசி மூலம் புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான அறிவியல் கண்காட்சியும் மாணவர்களால் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.