செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட்

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட்

44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு உலக செஸ் கொண்டாட்டம் கோவையில் முன்னோட்டம் என்ற தலைப்பில் புகைப்படம் எடுக்கும் செல்பி பாயிண்ட் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புகைப்படம் எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் செல்ஃபி பாயிண்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்பட பாயிண்ட் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி முடியும் வரை இருக்கும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.