மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை 

மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை 

கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் மற்றும் சிலர் தொடர்பு கொண்டனர். தங்களது நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை அடுத்து ரவீந்திரன் அங்கு சென்று சில நாட்கள் கழித்து தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். பணம் முதலீடு செய்தால் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஆகிவிடலாம் எனவும் கூறியுள்ளனர்.மேலும் பாலக்காடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பணிகளில் முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளனர் .இதை நம்பிய ரவீந்திரன் 85 லட்சம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளாக கொடுத்துள்ளார். இதற்கிடையே கொரோனா காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் ஹைட்ரோ வேலி நிறுவனத்தினர் மோசடி செய்தது ரவீந்திரனுக்கு தெரிய வந்தது. மேலும் ஹைட்ரோ வேலி நிறுவனத்தினர் இதேபோல மதுரை ஈரோடு சென்னை கேரளாவில் சில நகரங்கள் என பல இடங்களில் ஏராளமானவரிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதும் ரவீந்திரனுக்கு தெரிய வந்தது. மேலும் ஹைட்ரோ வேலி நிறுவனத்தினர் ஏராளமானவரிடம் எம் எல் எம் முறையில் அதிக வெற்றி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதும் ரவீந்திரனுக்கு தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரவீந்திரன் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த மதியழகன் , ஊட்டியைச் சேர்ந்த ராம்கி என்கிற ராமகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த ரகுமான் என்கிற கலீல் ரகுமான்,சாம் பிரகாஷ் ஆகிய மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.