செஸ் ஒலிம்பியாட் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…..!

செஸ் ஒலிம்பியாட் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…..!

கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பள்ளி சங்கம் சார்பில் விழிப்புணா்வு மாரத்தான் நேரு விளையாட்டு மைதானத்தில் துவங்கப்பட்டது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை மாநகர காவல் துணை ஆணையர் சுகாஷினி,மாவட்ட விளையட்டு அலுவலா் ரவிச்சந்திரன்,ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற மாரத்தான் போட்டி வஉசி மைதானம் வழியாக அண்ணா சிலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை சென்று மீண்டும் நேரு விளையாட்டு மைதானத்த்திற்கு வந்தடைந்தனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.