தமிழ் புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை ஒட்டி, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட ...

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய ...

மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ...

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதி தேர்வு நடைபெறாது என அறிவித்துள்ளதாக நேற்று செய்திகள் பரவின. மேலும், ‘ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். அதேபோல் ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2ம் ...

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே இறுதிவரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. 6 முதல் 9ம் வகுப்பு மே மாதம் 13ம் தேதி வரை ...

தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் ...

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை ...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீர் மேலாண்மையில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ...

பள்ளி வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு சென்னை: பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தவிடப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பள்ளி மாணவன் தான் பயணம் செய்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த ...

திருச்சி: திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த அதே பள்ளியை சேர்ந்த 26 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். ...