கோவையில் உரக் கடைகளில் சிறப்பு பறக்கும் படையினா் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 9 உரக்கடைகள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளனா். கோவை மாவட்டத்தில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை அலுவலா்கள் அடங்கிய 12 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தனியாா் ...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இந்தநிலை லக்னோவில் இருந்து விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு வந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக பெங்களூருவில் வானிலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதனால் விமானம் பெங்களூருவில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கோவையில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. கோவையில் மழை பெய்த ...

மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஐந்து இடங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பேரிடர், வெள்ளபெருக்கு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகையானது நடைபெற்று வருகின்றது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம், தேக்கம்பட்டி, சூலூர், வால்பாறை, ஆனைமலை ஆகிய 5 இடங்கள் தேர்வு ...

ரெயிலில் டிக்கெட் எடுக்காத 637 பேர் பிடிபட்டனர் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் ...

மதுரை: மின்கட்டண உயர்வு தொடர்பான மனுவின் மீது இறுதி முடிவெடுக்கக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின்கட்டண உயர்வு ...

சென்னை:ரேஷன் கடைகளில் சிறந்த சேவை வழங்குவதற்கான நம்பகத் தன்மையை கார்டுதாரர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவுத் துறை வாயிலாக, 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. சில ரேஷன் ஊழியர்கள் கடைகளை ...

சென்னை: வர்த்தக பயன்பாடு கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.96.00 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 5வது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து ...

நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு ...

கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை – நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும். பயணிகள் வசதிக்காக கோவை – மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கோவை – ...

கோவை: கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ...