கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம்: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் –  பராமரிக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் : பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை ஸ்மார்ட் சிட்டி: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள குளங்களை மாநகராட்சியினர் தூய்மைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலாங்குளத்தில் படகு சவாரி துவங்கியது. இந்நிலையில் அக்குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் மோட்டார் படகை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் சாப்பிடும் உணவுப் பொருள்களின் கவர்களை அப்படியே குளத்தில் வீசி செல்கின்றனர். இதனால்
பெலிக்கான் பறவையின் வாயில் பிளாஸ்டிக் கவர் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை உடனடியாக அதிகாரிகள் அந்த பறவையின் உயிரை காப்பாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் குளங்களை தினமும் தூய்மைப்படுத்த வேண்டும். இது போன்ற உயிரினங்கள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநகராட்சி செயல்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.