சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை காத்திருக்க வைத்ததோடு, ஆணங்களை திருப்பி வழங்காமல் இருந்ததற்காக சார்பதிவாளர் உள்பட 4 பேரை அதிரடியாக மாற்ற உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ...
சிங்கப்பூரில் தலைமை இடத்தை கொண்டிருக்கும் PhonePe இனி தனது தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றப் போவதாக அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான PhonePe இதுவரை அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் வைத்து நிர்வகித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில நிர்வாக காரணங்களுக்காக தற்போது சிங்கப்பூரில் இருந்து ...
இதுதொடர்பாக நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பினர். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை பணி இடை நீக்கம் செய்யாதது ஏன்.? அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது? முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்ட பின்பும் நடவடிக்கை எடுக்கவில்லை காரணம் என்ன? இதற்கு பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை ...
மருத்துவ நிபுணர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு மேகாலயாவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரச் சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கு இடையே செய்யப்படும் முதல் மருத்துவக் கூட்டாண்மை ஆகும். சென்னை ...
இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன.மற்ற போக்குவரத்தை விட பலரும் ரயில் போக்குவரத்தை தான் விரும்புகிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணிப்பதால் சில சிக்கல்களும் ரயில் பயணத்தில் ஏற்படுகிறது.அதன்படி இரவு நேரங்களில் போது மற்ற பயணிகளுக்கு இடையூறை சிலர் ஏற்படுத்துவதாக ரயில்வே அமைச்சகத்திற்கு புகார்கள் எழுந்துள்ளன. இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ...
கோவை மாநகரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நீலகிரியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது. ...
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜாவை நியமித்து குடியரசு தலைவர் அறிவிப்பு. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக டி.ராஜா பணிபுரிந்து வரும் நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது ...
இந்திய இரயில்வேயில் வாகன போக்குவரத்து சமீப காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ஆட்டோமொபைல் வாகனங்களை அதிக அளவில் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல், அதனால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வின் அளவை குறைத்து ஆட்டோமொபைல் துறைக்கு இந்திய ரயில்வே உதவி வருகிறது. ரயில்கள் மூலம் கார்களை ஏற்றிச் செல்லும் அளவு கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக ...
கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக முதல்வர் கடந்த 13ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தவாறு, கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை. ...













