கோவை பூ மாா்க்கெட்டில் சாலையை ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றம்..!

கோவை மாநகராட்சி 72-வது வார்டில் உள்ள புதிய பூ மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். விஷேச தினங்கள், முகூர்த்த நாள்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், பூ மார்க்கெட்டின் முன்புற சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, மேற்கு மண்டல மாநகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட்டில் திடீா் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பூ மார்க்கெட்டின் முன்புறம் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.