கோவை மாநகராட்சி 72-வது வார்டில் உள்ள புதிய பூ மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான மக்கள், வியாபாரிகள் வந்து செல்கின்றனர். விஷேச தினங்கள், முகூர்த்த நாள்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், பூ மார்க்கெட்டின் முன்புற சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் செல்ல இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதைத் ...
வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசித்து செல்ல சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு..!!
தூத்துக்குடி: வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மான்களை கண்டு ரசிக்க சூழல் சுற்றுலா தொடங்க வனத்துறை முடிவு செய்துள்ளது. நுழைவு பகுதியில் இருந்து மலையின் இருபுறமும் சுமார் 4 கி.மீ வரை மக்கள் சென்று மான்களை பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் பொதுமக்கள் மான்களை கண்டு ரசிக்க வசதியாக சூழல் சுற்றலா தொடங்க ...
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு , தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ...
நியாயவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்காதவர்கள் கௌரவ அட்டையை வாங்கி வைத்து கொள்ளலாம் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி கல்லுக்குழி பகுதியில் உள்ள நியாயவிலை கடையில், தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அங்கு ரேசன் பொருள் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர், ரேசன் ...
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் ஆயுத பூஜையை முன்னிட்டு பண்டிகை கால பொருட்கள் விற்பனை சிறப்பு சந்தை மீண்டும் திறக்கப்படுகிறது. வாகன கட்டண வசூலுக்கான ஏலம் வரும் 28ம் தேதி நடக்கிறது. அங்காடி நிர்வாக குழு விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு ...
சென்னை: தமிழ்நாடு, கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டல், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத அமைப்புக்களில் சேரும் வகையில் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பிஎப்ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
கோவை: தமிழக அரசின் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்கிறது. தீயணைப்பு துறை டி.ஜி.பி பிராஜ் கிஷோர் ரவி தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 150 ...
குழிக்குள் சிக்கிய பேருந்து: கோவையில் போக்குவரத்து பாதிப்பு கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கே.என்.ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர், செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி மழைக் காலங்களிலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இளநீர் ...
அரசுப் பேருந்துகளில் தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகையை முன்னிட்டு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானோர் செல்வது வழக்கம். தீபாவளியை ...













