சென்னை: சென்னை ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் நீதிபதி எம்.துரைசாமி. இவரை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. புதிய பதவியை நீதிபதி எம்.துரைசாமி செவ்வாய்க்கிழமை காலை ஏற்றுக் கொண்டு வழக்குகளை விசாரித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், ரியல் எஸ்டேட் தொடர்பான எந்த ...

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங்கின் பதவிக்காலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன் முடிகிறது அதனை ஒட்டி புதிய துணைவேந்தர் நியமிப்பதற்கு கல்வி அமைச்சகம் புதுச்சேரி பல்கலை செயற்குழுவில் உள்ள இருவரின் பெயரை பரிந்துரை செய்ய கூறியிருந்தது. இந்நிலையில் துணைவேந்தர் குர்மித் சிங் பதவி காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ...

கோவை: மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.72 ஆயிரமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சு விலை வரலாறு காணாத வகையில் ஒரு கேண்டி(356 கிலோ) ஒரு லட்சம் ரூபாயை கடந்ததால், ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. யூக ...

கோவை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046), இன்று மற்றும் ...

கோவை: சேலம் கோட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் ஆலோசனைக் குழு கூட்டம், கோட்ட மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவையில் இருந்து ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தினர். அதில் அவா்கள் கூறியிருப்பது:- 2023 பிப்ரவரியில், கோவை ரயில் நிலையத்தின் 150-வது ஆண்டு தொடக்கத்தை, சிறப்பு விழாவாகக் கொண்டாட குழு அமைக்க வேண்டும். ...

கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை ...

நாட்டின் அடுத்த முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை அடுத்த பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமித்தது. லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 ...

கோவை:  மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற ...

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ...

கோவையில் கடந்த ஓராண்டில் 40-க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டியான கோவையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த உட்கட்டமைப்புகளை கடந்து கோவை என்றாலே அதன் சுவையான நீரும், அழகான சீதோஷன நிலையும், அன்பான மக்களுமே நினைவுக்கு வருவார்கள். இதனால் கோவை என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். ...