பி.எப் ஐ.அமைப்புக்கு தடை எதிரொலி… கோவையில் மத்திய ஆயுத படை,அதிரடி படை உட்பட 2000 போலீசார் குவிப்பு… சமூக விரோத செயலில் ஈடுபட்டால் உடனடி கைது..!!

கோவை : பி எப். ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு காலம் தடை விதித்துள்ளது அல்லவா.?இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-கோவையில் மத்திய ஆயுத படை (சிஆர்பிஎப்)அதி விரைவு படை (ஆர்,ஏ,எப்)அதிரடிப்படை (எஸ்.டி.எப்)தமிழ்நாடு சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி) உட்பட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தெற்கு மண்டலம், மத்திய மண்டலம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.கோவையில் உள்ள முக்கியமான 20 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.கோவையில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் அன்றாட பணிகளை செய்து வருகிறார்கள்.சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்.கோவையில் நடந்த பெட்ரோல் -கெரோசின் குண்டு வீச்சு தொடர்பாக மேலும் ஒருவர் சிக்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.