இந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் ...

சென்னை: போலீஸாரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு ...

கோவை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ...

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு பயீர் சாகுபடி செய்யும் போது எதீர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு இரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மலையும், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வழிந்து ஓடியது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மழையின் காரணமாக வெள்ளம் புகுந்தது. அங்கு மழைநீர் ...

தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு, வாண வேடிக்கை என சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதேபோல் அரசுத் துறைகளிலும் சில ஊழியர்களும் அதிகாரிகளும் தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்துவிட்டால் போதும் ; பல்வேறு பணிகளுக்காக அந்தந்த துறையை நாடி வருவோரிடம் லஞ்ச வேட்டை நடத்தத் தொடங்கி விடுவார்கள். இம்முறையும் அது தொடர்ந்ததால் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மாநிலம் ...

கோவை: உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி உள்பட எந்த ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டாலும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் அதனை கொண்டாடுவார்கள். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதற்காக அந்த ...

வாஷிங்டன்: உலகின் டாப் 20 பொருளாதாரங்களை உள்ளடக்கி உள்ள ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் நிலையில், இது தொடர்பாக முக்கிய கருத்துகளைச் சர்வதேச நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்து உள்ளார். வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஓராண்டிற்கு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வரும். ஜி-20 என்பது சர்வதேச அளவில் ...

கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எஃப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எஃப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த ...