2028-ல் உலக அளவில் 3வது பொருளாதார நாடாக மாறும் இந்தியா..!

ந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு சில காரணங்கள் பொருளாதார நிபுணர்களால் கூறப்பட்டுள்ளது. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

உலக அளவில் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தி வந்த போதிலும் இந்தியாவின் பொருளாதாரம் தனித் தன்மையுடன் விளங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதன்படி 2028ஆம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முன்பாக அமெரிக்கா மற்றும் சீனா மட்டுமே இருக்கும் என்றும் 2028ஆம் ஆண்டில் இந்த மேஜிக் நடக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உலக அளவில் இந்தியா 3வது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கு சில காரணங்களை பொருளாதார நிபுணர்கள் வைத்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனித்தன்மையுடன் இருப்பதே முதல் காரணமாக கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலும் வளர்ந்த நாடுகள் தொற்றுநோய் மற்றும் போர் காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது என்பதும் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய் காரணமாகவும் போர் காரணமாகவும் இந்தியாவிலும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய தாக்கத்தை பொருளாதாரத்தில் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றும் அதனால் எந்த மாதிரியான தாக்கத்தையும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வந்தாலும் மற்ற நாடுகளின் நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாய் இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதை போல் இந்தியாவிலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் இந்திய வங்கி அமைப்பு எப்போதும் போல் வலுவாக உள்ளது என்றும் கடன் சுழற்சி அதிகரித்து வருவதால் பணவீக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து வருவது உண்மைதான் என்றாலும் இன்னும் கிட்டத்தட்ட $550 b நிதி நிலைமை இந்தியாவில் உள்ளது என்றும் அதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி விட்டு உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக இந்தியா மாறியது. இன்னும் சில ஆண்டுகளில் இங்கிலாந்தை விட மிக அதிகமாக இந்தியா பொருளாதார வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.