கோவை : போத்தனூர்-கோவை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (16-ந் தேதி) முதல் டிசம்பர் 8-ந் தேதி வரை 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-, ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352) கோவைக்கு பதில், போத்தனூர்-இருகூர் மாற்று ...
போக்குவரத்து நிலவரம் அறிந்து கொள்ள roadEase செயலி: அறிமுகம் செய்த கோவை காவல் ஆணையர் !!! கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் ...
கோவை: அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழகத்தில் சூரியஒளி மின் உற்பத்தித் துறையில் 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் மழை நேரங்களிலும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி தொடர்வதாக ...
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ரெயில் நிலையம் அருகே உள்ள தரை பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உப்பிலிபாளையம் தரைப்பாலம் மற்றும் ரெயில் நிலைய தரைப்பாலம், கிக்கானி தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் கொண்டு மழை நீரை வெளியேற்ற ...
தண்ணீர் கலந்த பெட்ரோல்: காருக்கு அடித்ததால் ஓட்டுநர் அதிர்ச்சி கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி ஓடி வருகிறது. இவரது காரின் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் ...
கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ...
கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் ...
கோவை: வேலூர் மருத் துவக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிற அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு ...
கோவை: நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாக தேங்வதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப்பணி ஆனைக் குழுவின் ...
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காசோளத்திற்கான விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் ஆண்டுதோறும் 3.10 கோடி டன் மக்காள சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 36 ஆயிரம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய ...