சபரிமலை சீசன் துவங்கியதை முன்னிட்டு கோவை வழியாக 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

கோவை:
சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் – கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07125) நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.
கோட்டயத்தில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.15 மணிக்குப் புறப்படும் கோட்டயம் – செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07126) நவம்பா் 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை)காலை 4 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா், நால்கொண்டா, சேரலப்பள்ளி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
கொல்லம் – செகந்தராபாத் கொல்லத்தில் இருந்து நவம்பா் 22, டிசம்பா் 6, 20, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) காலை 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் – செகந்தராபாத் சபரிமலை விரைவு ெரயில் (எண்: 07118) நவம்பா் 23, டிசம்பா் 7, 21, ஜனவரி 11 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.
செகந்தராபாதில் இருந்து நவம்பா் 27, டிசம்பா் 11, 25, ஜனவரி 1,15 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் – கொல்லம் சபரிமலை விரைவு ரயில் (எண்: 07121) நவம்பா் 28, டிசம்பா் 12, 26, ஜனவரி 2,16 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை)இரவு 11 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து நவம்பா் 29, டிசம்பா் 13, 27, ஜனவரி 3, 17 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் – செகந்தராபாத் சபரிமலை விரைவு ரயில் (எண்: 07122) நவம்பா் 30, டிசம்பா் 14, 28, ஜனவரி 4,18 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு செகந்தராபாதைச் சென்றடையும்.
செகந்தராபாதில் இருந்து நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை)பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் – கொல்லம் சபரிமலை சிறப்பு ரயில் (எண்: 07123) நவம்பா் 22, 29 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை)இரவு 11.50 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து நவம்பா் 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை)பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் கொல்லம் – செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07124) நவம்பா் 24, டிசம்பா் 1 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து நவம்பா் 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை)மாலை 3 மணிக்குப் புறப்படும் கொல்லம் – செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்: 07130) நவம்பா் 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை)இரவு 12.30 மணிக்கு செகந்தராபாத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கன்னூா், திருவல்லா, செங்கன்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா, ராசம்பேட்டா, கமலாபுரம், கொண்டாபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.