போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல்

போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல்

போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதை கடந்த 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை நீடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932 ஆம் ஆண்டு ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது கோவையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, ராமேஸ்வரம் திண்டுக்கலுக்கு ரயில் இயக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி போத்தனூர் வரையிலான ரயில் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து சுமார் ரூபாய் 750 கோடி செலவில் போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இந்த பணிகள் முடிந்து கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ரயிலில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்பொழுது 36 கோடியே 37 லட்சம் செலவில் மின்மயமாக்கும் பணிகளும் நிறைவு பெற்று மின்சார ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொள்ளாச்சி, போத்தனூர் ரயில் பாதையில் கோவை – மதுரை, கோவை – பொள்ளாச்சி ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. கோடிக் கணக்கில் செலவு செய்து அகல பாதையில் மின்மயமாக்கல் செய்து பிறகும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் எந்த பயனும் இல்லாத நிலையில் உள்ளது.