கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு

கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றன. அதுபோன்ற வாலாங்குளத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளதால், அங்கு பலர் சென்று சவாரி செய்து மகிழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள குளங்களில் வியாபார நோக்கில் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதீப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள மேற்கண்ட 5 குளங்களில் திரைப்படம், குறும்படம், சின்னத்திரை தொடர், நாடகங்கள், வியாபார நோக்கத்தில் அங்கேயே செட் அமைத்து பொதுமக்களை புகைப்படம் எடுத்து அவர்களுக்கு அவற்றை விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் அனுமதி இல்லாமல் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.