புதுடெல்லி: இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவு சாலை பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையில் இருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் 2-வது மிகப்பெரிய சாலை போக்குவரத்தை கொண்ட இந்தியாவில் சாலை உட்கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நாள்தோறும் 37 கி.மீ. தொலைவுக்கு புதியசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ...

கோவை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள ...

100% தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரில் தாழ்தள பேருந்துகள் குறிப்பிடப்படவில்லை என வைஷ்ணவி விஜயகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தாழ்தள ...

ராணுவத்தில் இதுவரை 80 பெண் அதிகாரிகள் கர்னல் பதவிக்கு (தேர்வு தரம்) அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முதல் முறையாக அந்தந்த ஆயுதங்கள் மற்றும் சேவைகளில் கட்டளை பிரிவுகளுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் சிறப்பு எண். 3 தேர்வு வாரிய நடவடிக்கைகள், ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கியது. தற்போது இராணுவ தலைமையகத்தில் லெப்டினன்ட் ...

டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

கலிபோர்னியா: கூகுள் நிறுவனத்திலிருந்து 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அதன் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தகவல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை அறிவித்து வரும் நிலையில் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டில் உலகளவில் ...

கோவை: கொரோனா தொற்று பரவலுக்குமுன்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டன. தொற்று பரவலால் விமானங்கள் இயக்கத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- ெகாரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2020, 2021-ம் ...

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 31) இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன உறுப்பினராக உள்ளார் . இவரது மனைவி மீனாட்சி (வயது(29) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.800 கோடிக்கும் மேல் டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுவிற்பனை அமோக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையையும் சேர்ந்து கூடுதலாக விற்பனையாகியுள்ளது. ...

குன்னூர்: இந்திய அரசால் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம் மூலமாக, நாடு முழுவதும் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அக்னி வீரர்களின் முதல் குழு, கடந்தாண்டு டிசம்பர் முதல் அந்தந்த பயிற்சி மையங்களில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கினர்.கொரோனா தொற்று காரணமாக, 3 வருட இடைவெளிக்குப் பிறகு, அக்னி வீரர்களுக்கு முதன் முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சி மையங்களிலும் உடல் ...