சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ஒரு ஆண் புள்ளி மானின் தலைப் பகுதி மற்றும் தோலுரிக்கப்பட்ட உடல் பகுதியையும் எடுத்துக் கொண்டு வருவதை பார்த்தவுடன் அவர்களை வனத் துறையினர் சுற்றி வளைத்து பிடித்து, சிறுமுகை வனச்சரக அலுவலகம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வைத்து மான வேட்டையாடுவது ஒப்புக் கொண்டனர். குற்றவாளிகளான

காந்தி, அம்மன் புதூர் கண்ணன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து இறந்த ஆண் புள்ளி மானின் தோலுரிக்கப்பட்ட உடல்பகுதி மற்றும் தலைப் பகுதியும், சூரி கத்தி, வெட்டு கத்தி. சுருக்கு கம்பி,

மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.