அஞ்சல் நிலையங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டத் திருவிழா – கோவையில் இன்று, நாளையும் நடக்கிறது..!

கோவை: அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடக்க திருவிழா இன்று, நாளை என 2 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அஞ்சலக வட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு திருவிழா இன்று, நாளை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் சேமிப்பு தொடங்குவதற்கான முன்பதிவு கோவை மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் நிலையம், துணை, கிளை என அனைத்து அஞ்சலகங்களிலும் நடக்கிறது. எனவே, பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க அருகில் உள்ள அஞ்சலகத்தை உடனே அணுகி முன்பதிவு செய்யலாம். முன்பதிவிற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் நகல் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.

10 வயதிற்குட்பட்ட அனைத்து பெண் குழந்தைகளுக்கும் நூறு சதவீதம் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் அனைத்து அஞ்சலகங்களில் நடக்கிறது. எனவே பெற்றோர் அனைவரும், அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.