கோவை: பெங்களூர் மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). நகை மொத்த வியாபாரி. இவர் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகை ஆபரணங்களை தயாரித்து தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறார். கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு அவரது கடையில் இருந்து ...

கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டன. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ...

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அரேமா எஃப்சிக்கும் பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில்  நடைபெற்றது. அப்போது பெர்செபயா சுரபயா அணியிடம் அரேமா எஃப்சி 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரேமா எஃப்சி ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ...

ஓடும் பேருந்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர்…போலீஸ் எனக்கூறி மிரட்டிய ஆசாமியை தேடும் போலீஸ். பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவரின் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், தன்னை போலீஸ் எனக்கூறிய நிலையில் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தில் ஒரு தம்பதி பயணம் செய்தனர். அவர்களின் பின் ...

கோவை குனியமுத்தூரில் முன்பகை காரணமாக டிரைவர் உட்பட 3 பேருக்கு கத்திக் குத்து கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. மேலும், திருடிய பொருட்களை திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் ...

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ...

கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் வாகன தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில், அவர்கள் உயர் ரக போதைப் பொருளான “Methamphedamine” ஐ ...

மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன், ...

பணம் வாங்கிய புஷ்பா : சரியாக பேசாததை தட்டி கேட்டவருக்கு அடி உதை கோவை உக்கடம் புள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (4). கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார் . இவருக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி புஷ்பா என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. கடந்த ...

கோவை: தமிழகம் முழுவதும் 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரை பணிமூப்பு தொடர்பாக திருத்திய பட்டியலை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டது. இதில் கோவை சிங்காநல்லூர், கிணத்துகடவு,மேட்டுப்பாளையம் உட்பட 26 ...