கோவை காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டை தகாத வார்த்தையால் திட்டிய பெண் கைது..!

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் கங்காதேவி. நேற்று இவர் காவல் நிலைய பணியில் இருந்தார். அப்போது தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தினேஷ் ,கவுதம் என்ற தாஸ் ஆகியோரை கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணைக்காக கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதை கேள்விப்பட்ட கவுதம் தாயார் திலகவதி (வயது 40) செல்வபுரம் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு கங்காதேவியை திட்டி தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தார்.இது குறித்து செல்வபுரம் போலீசில் கங்காதேவி புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திலகவதியை கைது செய்தனர் . இவர் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல், திட்டுதல் உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.