காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறி உள்ளது. சத்தம் கேட்ட அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் ...

அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை… அரசு வேலை வாங்கித் தருவதாக, பட்டதாரியிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் முருகன், 25 பி.இ., படித்தவர். இவரது சகோதரர் வெள்ளைபாண்டி பி.சி.ஏ., பட்டதாரி. ...

கோவை சாய்பாபா காலனி ,கே .கே .புதூர் சின்னச்சாமி விதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (வயது73) .இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலையில் இவர்வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கிடந்த 2 ...

கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 33 )இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திபுரம், சத்தி ரோடு, அலமுநகரை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜய் ( வயது 32)என்பவரும் நண்பர்கள்.இந்த நிலையில் விஜயகுமார் தனது நண்பர் முகுந்தனிடம் 12 -7 -20 21 அன்று ரூ.25 லட்சம் ...

கோவை: திருப்பூர் மாவட்டம் காங்கையம் பகுதியை சேர்ந்தவர் பிரிசன் (வயது 23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ...

கோவை: தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார். ஆப்பிலை பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். ...

மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

கோவையில் விபத்தில் மகன் பலியான விரக்தி : தற்கொலைக்கு முயன்ற பெற்றோர் உயிரிழந்த சோகம் கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள நாவவூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் சங்கர். 46 வயதான இவர், ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். இவரது மனைவி நந்தினி (45). இவர்களது ஒரே மகன் ரவி கிருஷ்ணன் (22) தனியார் கல்லூரியில் ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சாந்திபிரியா(34) என்பவர் பணியாற்றி வந்தார். அவருடன் நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கேசியராக நந்தினி(30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக விஜயகுமார்(30) பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 2021 மார்ச் 9-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் ...

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62). திருமண புரோக்கர். இவரது வீட்டின் அருகே அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது சிறுமியின் தாத்தாவும், பழனிசாமியும் டி.வி.யில் படம் பார்த்து கொண்டு இருந்தனர். ...