கோவை: தமிழ்நாடு முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன் சிலர் நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக மதுக்கரை போடிபாளையத்தைச் ...

கோவை: சென்னை போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பட்டு வரைக்கும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகர், மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவரது மனைவி ஸ்ரீதேவி, (வயது 38.) இவர்கள் கடந்த, 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சேலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.நள்ளிரவு, 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.அப்போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு ...

 நாய்கள் பலி: ஒருவர் மீது வழக்கு கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் ஆஸ்டின். இவர் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று நாய் மீது மோதியது. இதில் அந்த இரண்டு நாய்களும் ...

தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் ...

தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிடபட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் ...

கோவை மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ...

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு விஸ்வேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் பூசாரி விவேக் என்பவர் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் ரூ. 1000 திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...