திருப்பூரில் 157 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் – வடமாநில வியாபாரி கைது..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் ,ஓம் ஆதித்யா நகரில் ஆர்.வி.ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் திலீப் குமார் (வயது 38) இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது கடையில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 157.100 கிலோ எடை கொண்ட 25,040 கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லெட் மதிப்பு ரூ10 லட்சம் இருக்கும். இங்கிருந்து பல பெட்டிக் கடைகளுக்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக திலிப் குமார் கைது செய்யப்பட்டார். இவர் மீது தர்மபுரி சேலம், காவல் நிலையங்களில் கஞ்சா சாக்லெட் விற்ற வழக்குகள் உள்ளன. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.