கோவை அருகே உள்ள சூலூர் ,நரசிம்மமாமில் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 18 கிலோ கஞ்சா சாக்லெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம், பருவாய், ...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் . மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜீவானந்தம் என்பவர் ...
கரூர் மாவட்டம் பாலக்காட்டுத்துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் யுவராஜ் (வயது 18) இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள மாச்சி கவுண்டன்பாளையத்தில் ஒரு லாட்ஜ் அருகே நின்று கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோடு சுற்றி வந்த மதுக்கரை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதைப் பொருள் கடத்தல் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் 46 தனிபடை அமைக்கப்பட்டது . இவர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது மேட்டுப்பாளையம் பகுதியில் அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிபொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ...
கோவை கரும்புக்கடை, சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர் .இவரது மகள் அஸ்மி (வயது 28) இவருக்கும் சிவகிரி, விஸ்வநாத பேரியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் என்பவருக்கும் கடந்த 17 -3 -2019 அன்று சிவகிரியில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது அஸ்மியின் பெற்றோர்கள் 50 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தனர் .திருமணம் முடித்து இரண்டு ...
கோவை சுக்ரவார்பேட்டைேய சேர்ந்தவர் அருள் செல்வகுமார் (வயது 41). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் காணவில்லை. இதுகுறித்து அவர் ஆர். எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ...
கோவை கணபதி பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 31)அந்த பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடையும், பால் வியாபாரமும் செய்து வருகிறார் .6 -ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .அங்கிருந்த 6 செல்போன் ரூ28ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. ...
கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம், கடலைக்கார சந்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கேபிள் வயர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி வினோத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான போலி ...
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் ...
கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ளகுட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 53 ) விவசாயி.இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 15 ஆயிரத்தை காணவில்லை.யாரோ ...












