ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடிய மேற்கு வங்காள தொழிலாளி சிக்கினார்..!

கோவை ஆர். எஸ் .புரம். மேற்கு பொன்னுரங்கம் வீதியை சேர்ந்தவர் தர்ஷந்த் ஜெயின், இவரது மகன்.பியூஸ் ஜெயந்த் (வயது 35) இவர் ஆர் எஸ் புரம் சீனிவாச ராகவ வீதியில் பிரசாந்த் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை வியாபாரம் செய்து வருகிறார். அவரது கடையில் நகை தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சதாம் உசைன் (வயது 25) என்பவரிடம் 621.660 கிராம் கைச்செயின், கம்மல்களை, பாலிஷ் ( லேசர் சால்டுரிங்), வேலை செய்ய கொடுத்தார் அந்த நகைகளுடன் சதாம் உசேன் எங்கோ மாயமாகிவிட்டார். இதன் மதிப்பு ரூ24 லட்சத்து 86 ஆயிரத்து 640 ஆகும்.

இது குறித்து பீயூஸ் ஜெயின் ஆர் .எஸ் .புரம், போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து நகைத் தொழிலாளி சதாம் உசேனை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் பிரபு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்,கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு திருநாவுக்கரசு ஆகியோர் மேற்கு வங்காளம் சென்று சதாம் உசேனை நேற்று கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து தங்க நகைகள் மீட்கபட்டது.