விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு – வாலிபர் கைது..!

கோவை கே.ஜி. சாவடி அருகே உள்ளகுட்டி கவுண்டன் பதியை சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 53 ) விவசாயி.இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தன் மனைவியுடன் தோட்டத்துக்கு சென்று விட்டார்.மாலையில் திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ 15 ஆயிரத்தை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து தங்கவேல் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் உதய சந்திரன் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் கீழப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அபூபக்கர் (வயது 22) என்பவரை கைது செய்தார் .இவர் தற்போது நவக்கரையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.