கோவை எலக்ட்ரிக்கல் கடையில் போலி கேபிள் ஒயர் விற்பனை- விற்பனையாளர்கள் கைது..!

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம், கடலைக்கார சந்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான கேபிள் வயர் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் அதிகாரி வினோத் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஏராளமான போலி வயர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விற்பனையாளர்கள் நரேந்திர சிங் (55) விக்ரம் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடையில் இருந்த ஏராளமான போலி கேபிள் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.