கோவை கணபதிபுதூர் பாலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மோகன் ( 35 )கார்த்திகேயன் (37) ஹரிஹரன் (37) சிவகுமார் (50) பாலமுருகன் ...

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அங்கண்ண தேவர் விதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48 )இவர் ஒரு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்த அஜய் பிரசாத் என்பவரிடம் விவசாய தொழில் தொடங்குவது தொடர்பாக ரூ 10 லட்சம் கொடுத்தாராம். அந்த பணத்தை அவர் ...

கோவை : மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்.டி .முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஎச்.டி படிப்புக்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார். அந்த ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள பிளிச்சி, பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 54 ) கூலி தொழிலாளி .இவரது மனைவி செல்வி ( வயது 38) இவர்களுக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அய்யாசாமி குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடமான பெரியநாயக்கன் ...

கோவை பாலக்காடு சாலை கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் கடந்த 20 ம் தேதி 8 கடைகளை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் சுமார் 80 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டது. இதே போல் வேலந்தாவலம் சாலை பிச்சனூர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திரன் தனது ...

கோவை வின்சென்ட் ரோட்டில் தனியார் வானொலி(Suryan FM) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மார்கெட்டிங் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியாற்றியவர் பிரதீப்குமார். இவர் 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு தனியார் வங்கி ஒன்றில் சூரியன் என்ற பெயரில் வங்கிக் கணக்கு ஒன்று துவங்கி விளம்பரத்திற்காக 30 லட்சத்து 67 ஆயிரம் பெற்று மோசடி செய்ததாக வானொலியின் நிர்வாக ...

இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர் காவல்துறையினர். கடந்த 2021-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அரசத் என்பவரிடம் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் தனது கூட்டாளிகள் ...

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்ஜி புதூர் என்கின்ற இடத்தில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த முட்புதராகவும், பொதுமக்கள் செல்வதற்கு அச்சப்படக்கூடிய பகுதியாக இருந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு, புவனேஷ் குமாரின் நண்பர் பாலாஜி மற்றும் ஒரு சில நண்பர்கள் இப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். மேலும் அதே பகுதியை ...

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது ...