இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாபெரும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தும் வகையில் அதிரடி முடிவுகளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சந்தையை அசைத்துப் பார்க்கும் வகையில், இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘புது தில்லி பிரகடனம்’ ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்குச் சவால் விடும் வகையில், வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பு இந்த மாநாட்டில் பின்வரும் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.எதிர்காலத் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக விளங்கும் அரிய கனிம வளங்களை மேற்கத்திய நாடுகள் முடக்கி வைக்கும் போக்கிற்குத் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கனிம வளப் பாதுகாப்பில் கூட்டு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.அடிமைத் தொழில்நுட்பச் சங்கிலிகளைத் தகர்த்து, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை உறுப்பு நாடுகள் தாங்களே சொந்தமாக வளர்த்தெடுக்கவும், பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.டாலர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் நோக்கில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களிலேயே மேற்கொள்வது குறித்த அதிரடி முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதின் அவசியத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் சக்தியாகக் குளோபல் சவுத் எனப்படும் தெற்காசிய மற்றும் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்பதை இந்த மாநாடு உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் செல்வாக்கையும், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வலிமையையும் பறைசாற்றியுள்ள இந்த ‘புது தில்லி பிரகடனம்’, உலகப் பொருளாதாரத்தில் புதியதொரு வரலாற்றை எழுதத் தயாராகி வருகிறது.







