கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் ...

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராகவும் உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் பதவியில் உள்ளார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதிமுக ...

குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் அருகே ஒரு கொள்கலனிலிருந்து ரூ.376.5 கோடி மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் குஜராத் தீவிரவாத செயல்கள் தடுப்பு படையினரால் (ஏடிஎஸ்) கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடத்தப்பட்ட ஹெராயின் பஞ்சாப்புக்கு அனுப்பப்பட இருந்ததாக குஜராத் காவல்துறை தலைமை இயக்குநர் ஆஷிஷ் பாட்டியா தெரிவித்திருக்கிறார். துணி சுருள்களுக்குள் ...

சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி உறவினர் சந்திரசேகர்; அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில், 500 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை தலைமையிடமாக வைத்து எஸ்.பி.கே., கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நிறுவனத்தை, ராமநாதபுரம் மாவட்டம், கீழமுடிமன்னார் ...

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1600 கோடி ரூபாய் மூலம் பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக 14 தொழிலதிபர்கள் மீது வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி ரூ.1000, ரூ.500 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது தன்னிடமிருந்த ...

கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் 22-ந் ...

இந்தியாவில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாதச் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடன் தொகையை திரும்பச் செலுத்தாமல், பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் ...

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி, அமைதி நகர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்குரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கோபிநாத்,சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன்,மற்றும் போலீசார் நேற்று அங்கு தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை ...

கோவை பெரியநாயக்கன் பாைளயம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா ...

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இல்லாத ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியது உட்பட இரண்டு பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தாரை வழக்கில் சிக்கவைத்துள்ளது. ஆட்சி ...