கோவை பெரியநாயக்கன் பாைளயம் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த ஒடிசாவை சேர்ந்த அக்ஷை தாஸ் (வயது 44) மற்றும் பினோய தாஸ் (29) என்பர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளில் , ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.