கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது முறையாக தனிப்படையினர் ஆறுகுட்டியிடமும், அவரது உதவியாளர் பாலாஜி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் ஆறுகுட்டியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணைக்காக ஆறுகுட்டி 11.40 மணி அளவில் காவலர் பயிற்சி வளாக்த்திற்கு விசாரணை மையத்திற்கு வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது சில கேள்விகள் விடுபட்டு இருந்ததாகவும், அது தொடர்பாக விசாரணை நடத்தவே தற்போது
ஆறுகுட்டி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.