கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை செக் போஸ்ட் பகுதியில் தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார். அப்போது 2 பேர் கையில் பையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் பையை கிழே போட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பையில் 20 கிலோ கஞ்சா இருந்தது ...
கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள இந்திரா நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவர்களிடம் 110 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பழைய புதூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36 )இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்..இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். ...
கோவை பீளமேடு. நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சந்தியா ( வயது 21) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்று விட்டு தனது அக்கா சுகந்தியுடன் கோவைக்கு வந்தார்..வீட்டுக்குள் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி ...
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (வயது 50) இவர் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு உக்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அவர் தலைமறைவானார். இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .இந்த வழக்கில் முஜிபுர் ரகுமான் இதுவரை ...
கோவை கரும்புக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று இரவு அங்குள்ள ஆசாத் நகர் மைதானத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 76 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கரும்புக்கடை ஆசாத் நகர் 9-வது ...
கோவை மாநகரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கோவை மாநகரம் முழுவதும் கடந்த 28ஆம் தேதி: ஸ்டாமிங் ஆபரேஷன் “எனப்படும் தீவிர ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கீழே இறங்கி நின்றது. இது குறித்த தகவல் அறிந்த புஞ்சைப் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு ...
சென்னை: ‘போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி நேற்று முன்தினம் பறிக்கப்பட்டு, காவல் துறையின் ...
கோவை குனியமுத்தூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 42) கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி வியாபாரம் செய்து வரும் 2 பேர் சென்றனர்.இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர் மடியாவை சேர்ந்தவர்கள்.இவர்கள் சுதாகரிடம்நெருங்கி பழகினார்கள். பின்னர் தங்கள் ஊரில் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதாக கூறினார்கள்.அதை ...













