தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் மதுபான பாட்டில்களின் விலை குறைவாக இருக்கிறது. அதோடு, அங்கு மதுபான பாட்டில்கள் தனியார் கடைகளில் விற்கப்படுவதால் பல விதமான, வகையான மதுபாட்டில்கள் அங்கே கிடைக்கிறது.எனவே, தமிழ்நாட்டிலிருந்து மதுபான பிரியர்கள் பலரும் புதுச்சேரி சென்று மது பாட்டிலை வாங்கி அருந்துகிறார்கள். சிலர் தமிழ்நாட்டுக்கு மதுபான பாட்டில்களை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், புதுச்சேரி ...

ஆந்திராவில் பல இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றனர். ஆந்திராவில் பெட்ரோல், டிசல் பற்றாக்குறை இல்லை என்று அதிகாரிகள் கூறினாலும் வாகன ஒட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறைதான் டேங்கர்களை அனுப்புவதாகவும் இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ...

தமிழகத்தில் தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. நெல்லை ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 14 மிமீ பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய ...

சில நாட்களுக்கு முன்புதான், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டது .இந்த உயர்வு அகவிலைப்படியை 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி இப்போது 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான தற்போதைய அகவிலைப்படி உயர்வு, ...

அமெரிக்கா – ஈரான் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என்று ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் டொனால்ட் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுகிறது, அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுக்கிறது என்று பாகிஸ்தான் மீது ஈரான் குற்றம்சாட்டியிருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்கா -இஸ்ரேல் இடையிலான ...

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணக்கீட்டின்படி, இந்த அதிர்வு 6.1 ரிக்டர் அளவாகவும், ...

தேர்தல் வாக்குப்பதிவுக்கான விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விடுவது, சுற்றுலா என்று கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு வருவதால், விடிய விடிய ஜி.எஸ்.டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியது. நேற்று மாலை முதலே திருச்சி ...

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையிலும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் இருப்பது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல் அச்சம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான அயதுல்லா அலி காமேனி, ...

சீனா நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ நகரில் உலகையே அதிர வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. எப்போதுமே மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியில் இருந்து 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பொக்கிஷம் வெளிவந்துள்ளது. ஆமாம், அங்கே 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது இன்று உலக ...

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் விநியோக சங்கிலியில் சற்று ...